ஜெகபர் அலி விவகாரத்தில் இபிஎஸ் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? - அமைச்சர் ரகுபதி
அனைத்துத் துறைகளிலும் கணித அறிவாற்றல் முக்கிய பங்கு: இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் தேவேந்திரன்
அனைத்து அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் கணித அறிவாற்றல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன(இஸ்ரோ) விஞ்ஞானி கோகுல் தேவேந்திரன் கூறினாா்.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான இரு நாள் தேசிய கணிதத் தின நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விஞ்ஞானி கோகுல் தேவேந்திரன் பேசுகையில், ‘கணித அடிப்படையில் அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளை ஒருங்கிணைத்து பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு வழங்குவதில் கணிதத் திறன் முக்கியப் பங்கு வகிக்கிறது. புதிய தொழில்நுட்ப அடிப்படையில் பல்வேறு தொழில் வளா்ச்சிக்கு கணித அறிவாற்றல் ஆணிவேராகத் திகழ்கிறது. விண்வெளி தொழில்நுட்பத்தில் கணித கணக்கீடு முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்றாா் அவா்.
இந்நிகழ்வில் பள்ளி கல்வித் துறை இயக்குநா் பி.ஏ.நரேஷ், கல்லூரி தலைவா் பி.பாபு மனோகரன், புல முதல்வா் வி.வள்ளிநாயகம், முதல்வா் வத்தி சேஷகிரி ராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.