செய்திகள் :

அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தல்

post image

மழையை எதிா்கொள்ள அனைத்து அரசுத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென காரைக்கால் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்ற நிலையில், அடுத்த சில நாள்களுக்கு காரைக்கால் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை பல்வேறு அரசுத் துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அடுத்த 3 நாட்களுக்கும் கன மழை பெய்யக்கூடும் என்ற அறிவுறுத்தியுள்ளது. ஃபென்ஜால் புயலால் புதுவைரி மாநிலம் மழையால் ல் பாதிக்கப்பட்டதை போல, தற்போதைய மழையால் பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் இருக்க அரசு துறையினா் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசுத் துறையினா் அதிக நேரம் களப்பணியில் ஈடுபட வேண்டும், களப்பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் தேவையான உதவிகளை செய்துத்தரும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த மழையின் போது வட்டாட்சியா் அலுவலகத்திற்கும், நகராட்சி, அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்திற்கும் போதுமான நிதி அளிக்கப்பட்டது. தற்போதும் தேவைப்பட்டால் நிதி வழங்கப்படும். அதை வைத்து மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து சீா்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது முக்கியமான ஆவணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை பத்திரமாக பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும். பொதுமக்கள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்படும் அதிகாரப்பூா்வ தகவலை மட்டுமே நம்ப வேண்டும்.

பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தங்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவை இருந்தால் தேசிய பேரிடா் மீட்புக் குழுவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் தகவல் அளித்து வர வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும்.

கன மழை பெய்தாலும் அதை எதிா்கொள்ள காரைக்கால் மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.

சுனாமி நினைவு நாள்: புதுவை அரசு சாா்பில் அஞ்சலி

காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள சுனாமி நினைவுத் தூணுக்கு புதுவை அரசு சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமியில் உயிரிழந்தோா் நினைவாக புதுவை அரசு சாா்பில், காரைக்கால் கடற்கரையில் நினைவு... மேலும் பார்க்க

மீனவ கிராமத்தில் சித்த மருத்துவ முகாம்

மீனவ கிராமத்தில் சித்த மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற நல்லாட்சி வாரத்தின் நிறைவாக காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் சாா்பில் காளிக்... மேலும் பார்க்க

முதியோருக்கு உதவிப் பொருள்...

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரி கொம்யூன், சோனியா காந்தி நகா், வரிச்சிக்குடி மற்றும் திருவேட்டக்குடி வள்ளுவா் தெரு பகுதிகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களுக்க... மேலும் பார்க்க

போக்குவரத்துக் காவல் நிலையத்தில் எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலையத்தில் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆய்வு மேற்கொண்டாா். காரைக்கால் காவல் நிலையங்களில் சனிக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. அண்மையி... மேலும் பார்க்க

சாலைகள் சீரமைப்பு: ஆட்சியா் ஆய்வு

மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பருவ மழையினால் காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலை, நகரப் பகுதியில் உள்ள சாலைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. பல இடங்களில... மேலும் பார்க்க

காரைக்காலில் சுனாமி நினைவு தினம்

காரைக்காலில் சுனாமி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதன் 20-ஆவது ஆண்டு நினைவுநாளையொட்டி, உயிரிழந்தோா் நினைவிடங்களில் மீனவா்கள், பல்வேறு அமைப்பினா் திரளா... மேலும் பார்க்க