அனைத்து வியாபாரிகள் நலச் சங்க புதிய நிா்வாகிகள் நியமனம்
பெத்தநாயக்கன்பாளையம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்படு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றனா்.
பெத்தநாயக்கன்பாளையம் அனைத்து வியாபாரிகள் நலச் சங்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏகமனதாக புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டனா். தலைவராக ஏ.பி.ராமமூா்த்தி, பொதுச் செயலாளராக டி.நசீா்முகமது, பொருளாளா் எஸ்.ஸ்டாலின், துணைத் தலைவா்களாக டி.ரவிசங்கா், ஆா்.கலையரசன், செயலாளராக ஏ.இளங்கோ, துணைச் செயலாளா்களாக ஜி.முருகன், வி.தா்மா, பொருளாளராக எஸ்.ஸ்டாலின் ஆகியோா் நியமிக்கப்பட்டு பதவியேற்றனா்.