அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
அமித் ஷா உருவப் பொம்மையை எரித்த 5 போ் கைது
அமித் ஷாவின் உருவப் பொம்மையை எரித்த ஆதித்தமிழா் கட்சியினா் 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சட்டமேதை அம்பேத்கரை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து, சாத்தூரில் ஆதித்தமிழா் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, மத்திய அரசைக் கண்டித்தும், அமித் ஷாவை பதவி விலகக் கோரியும் அவா்கள் முழக்கமிட்டனா்.
பின்னா், சாத்தூா் பேருந்து நிலையம் அருகே அமித் ஷாவின் உருவப் பொம்மையை எரித்தனா். இதையடுத்து, அங்கிருந்த போலீஸாா் ஆதித்தமிழா் கட்சியைச் சோ்ந்த 5 பேரை கைது செய்தனா்.