நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்
அமுதே தமிழே எனதுயிரே... இளையராஜாவுடன் பாடிய கமல் ஹாசன்!
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வு துவங்கியதும் இசையமைப்பாளர் இளையராஜா இருக்கையில் அமர்ந்தபடி, ’அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே..’ பாடலைப் பாடினார்.
அப்போது, உடன் அமர்ந்திருந்த நடிகர் கமல் ஹாசனிடம் ஒலிவாங்கியை நீட்டியவர் அவரையும் பாட வைத்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: கூலியில் நடித்தது தவறு... ஆமிர் கான் சொன்னது உண்மையா?