செய்திகள் :

அமெரிக்காவில் மனைவி, மகனைக் கொன்று தற்கொலை செய்த இந்திய தொழிலதிபர்

post image

அமெரிக்காவின் நியூகாஸ்டில் பகுதியில் வசித்து வந்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி (45), தனது மனைவி சுவேதா (41) மற்றும் 14 வயது மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஏப்ரல் 24ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகவும், சம்பவத்தின் போது இவர்களது இளைய மகன் வீட்டில் இல்லாததால், அவர் உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலையில் துப்பாக்கிக் குண்டுகள், வீட்டு ஜன்னல் முழுவதும் ரத்தக் கறை.. என ஹோலோவோர்ல்டு தலைமை செயல் நிர்வாகியும், கர்நாடகத்தைச் சேர்ந்தவருமான ஹர்ஷவர்தனா கிக்கேரி, தனது மனைவி மற்றும் மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் குறித்து அந்நாட்டு ஊடகங்கள் விவரித்துள்ளன.

ஸ்வீடனில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு! 3 பேர் பலி...16 வயது சிறுவன் கைது!

ஸ்வீடன் நாட்டில் சாலையில் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர். உப்சலா நகரத்தில் வக்சலா சதுக்கத்தின் அருகில் கடந்த ஏப்.29 ஆம் தேதியன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்... மேலும் பார்க்க

ஈரான்: இஸ்ரேலின் உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஈரான் நாட்டில் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுக்காக உளவு பார்த்தாகக் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவான மொஸாத் அமைப்பின் மூத்த உளவாளியாகக் கருதப்பட்... மேலும் பார்க்க

ஈரான் அலட்சியத்தால் துறைமுக வெடிவிபத்து

ஈரானின் தென்மேற்கே அமைந்துள்ள நாட்டின் மிகப் பெரிய ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்துக்கு ஒரு சிலரின் அலட்சியப் போக்குதான் காரணம் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பாத... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு விமானத்தில் ஆயுதங்கள் அனுப்பவில்லை- துருக்கி மறுப்பு

இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பிவைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது. காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள்... மேலும் பார்க்க

சீன உணவகத்தில் தீ: 22 போ் உயிரிழப்பு

சீனாவின் லியாவோனிங் மாகாணம், லியோவ்யாங் நகரிலுள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 22 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா். அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் இந்தத்... மேலும் பார்க்க

விண்வெளி செல்லும் இந்திய வீரர்! யார் இந்த சுபான்ஷு சுக்லா?

இந்திய விண்வெளி வீரர் கேப்டன் சுபான்ஷு சுக்லா மே 29ஆம் தேதி விண்வெளிக்கு செல்லவிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வ... மேலும் பார்க்க