கோவையில் லாரி மோதி தெற்கு மகளிர் காவல் ஆய்வாளர் பானுமதி பலி!
அமெரிக்காவில் மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மருந்துகளுக்கு 100 சதவிகிதம் வரி விதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டு பர்னிச்சருக்கு 30 சதவிகிதமும், கனரக லாரிகளுக்கு 25 சதவிகிதமும் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, நாள்தோறும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதிமுதல் 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவை மையமாகக் கொண்டு உற்பத்தி ஆலை இல்லாத அனைத்து நிறுவனங்களின் மருந்துகளுக்கும் இது பொருந்தும் என்றும், அமெரிக்காவுக்குள் ஆலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கினால் வரி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மருந்துகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் இறக்குமதி வரியால் இந்திய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. கடந்தாண்டு அமெரிக்காவுக்கு ரூ. 31 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகளை இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன.
இந்தாண்டின் முதல் பாதியில் மட்டும் ரூ. 32 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், சமையலறை மற்றும் கழிப்பறை பொருள்களுக்கு 50%, பர்னிச்சர் பொருள்களுக்கு 30% மற்றும் கனரக லாரிகளுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.