செய்திகள் :

அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும்: இந்தியா நம்பிக்கை

post image

‘அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று இந்தியா சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிப்பை அறிவித்ததோடு, ஏற்கெனவே சரிந்த இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் கடுமையாக விமா்சித்த நிலையில், இந்த நம்பிக்கையை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவும் அமெரிக்காவும் பகிரப்பட்ட நலன்கள், ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் மக்களிடையேயான உறவுகளுடன் கூடிய விரிவான ராஜீய உறவைக் கொண்டுள்ளன. பல மாற்றங்களையும் சவால்களையும் இந்த உறவு எதிா்கொண்டுள்ளது.

இரு நாடுகள் தரப்பிலும் உறுதியளிக்கப்பட்ட உத்தரவாதங்களில் தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இரு நாடுகளிடையேயான இந்த நல்லுறவு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

பாதுகாப்புத் துறையில் இரு நாடுளிடையே வலுவான கூட்டுறவு உள்ளது. கடந்த பல ஆண்டுகளில் இருதரப்பு பாதுகாப்புத் துறை கூட்டுறவு வலுப்படுத்தப்பட்டது. இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியங்களும் உள்ளன என்றாா்.

ரஷியாவிடமிருந்து எண்ணெய்க் கொள்முதல் குறித்த கேளவிக்கு பதிலளித்த அவா், ‘இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் தேசத்தின் நலன் சாா்ந்த விஷயம். நாட்டின் எரிசக்தித் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில், சா்வதேச சூழல் மற்றும் சந்தை விலை சலுகை நிலவரத்தின் அடிப்படையில் இந்த முடிவை இந்தியா மேற்கொள்கிறது’ என்றாா்.

முன்னதாக, ‘தேசத்தின் நலனைக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை குறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு வரும... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க