Shaji N Karun: பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி என்.கருண் காலமானார்!
அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 30 பேர் பலி!
ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறையின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 30 பேர் கொல்லப்பட்டதாக யேமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹவுத்திகளின் கோட்டையான யேமனின் சாதா கவர்னரேட்டில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த பத்தாண்டுக் காலமாக எத்தியோப்பியா மற்றும் அண்டை நாடான சௌதி அரேபியாவில் வேலை செய்வதற்காக நாட்டைக் கடக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இறப்பு எண்ணிக்கை குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெயியாகவில்லை, மேலும் ஹவுத்திகளின் கோட்டையான யேமனின் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் ஒப்புக்கொள்ளவில்லை.
மேலும், சம்பவ இடத்தில் சுமார் 100 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது.