அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
அமெரிக்க அதிபருக்கே 7 கட்டுப்பாடுகள் இருக்கிறது! கார் ஓட்டக் கூடாது!
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றிருக்கிறார். அவருடன் துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் பதவியேற்றுக்கொண்டார்.
வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் இருவரும் பதவியேற்றுக் கொண்டனர்.
அதிபராகப் பதவியேற்றதுமே, அமெரிக்காவுக்குத்தான் முன்னுரிமை என்பதை வலியுறுத்தும் பல உத்தரவுகளில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டு அதிரடி காட்டியிருக்கிறார்.
புதிய புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அமெரிக்க அதிபராக இருந்தாலுமே, அவர்களுக்கே பல கட்டுப்பாடுகள் இருக்கிறது.
கார் ஓட்டக் கூடாது
அமெரிக்காவின் அதிபராக இருப்பவர், முன்னாள் அதிபர்கள், துணை அதிபர் யாரும், கார் ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது. ஒருவர் அமெரிக்க அதிபராகிவிட்டாலே, அவரது வாழ்நாள் முழுக்க அவர் சாலைகளில் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஆனால், அவர்களது பங்களாக்கள், விடுமுறைக் கொண்டாட்டங்களின்போது தங்கும் இடங்களுக்குள் வேண்டுமானால் ஆசை தீர கார் ஓட்டிப் பார்த்துக் கொள்ளலாம்.
சொந்தமாக செல்ஃபோன் கிடையாது
அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர், பாதுகாப்புக் காரணங்களுக்காக, சொந்தமாக செல்ஃபோன் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. கடைசியாக ஒபாமா அதிபராக இருந்த போது, ஆலோசகர்களின் அறிவுறுத்தலை தாண்டி, பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட ஐபேட் வைத்திருந்தார். ஜோ பைடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்தார். முன்பு டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த போது, குறுகிய காலத்துக்கு செல்ஃபோன்களை மாற்றி வந்தார். இப்போது என்ன செய்வார் என்று தெரியவில்லை.