செய்திகள் :

அமெரிக்க பணியைத் துறந்து நாடு திரும்புமாறு குடிமக்களுக்கு கொலம்பியா அதிபர் அழைப்பு!

post image

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள கொலம்பியா நாட்டு மக்கள் அந்நாட்டிலுள்ள பணியைத் துறந்து தாயகம் திரும்புமாறு அதிபர் குஸ்டாவோ ஃபெட்ரோ அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டதின் பின்னர் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டு மக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் திட்டத்தை முடுக்கிவிட்டார். அதன் ஒரு பகுதியாக கொலம்பியா நாட்டைச் சேர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக ராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டனர்.

இந்நிலையில், இன்று (ஜன.31) காலை கொலம்பியா அதிபர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்க பதிவில் கூறியிருப்பதாவது கொலம்பியா நாட்டு மக்கள் அமெரிக்காவிலுள்ள தங்களது பணியைத் துறந்து தாய் நாட்டிற்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். இடது சாரி அதிபரான குஸ்டாவோ, ’செல்வம் உழைக்கும் மக்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது’ என்றும் ’கொலம்பியாவில் ஒன்றாக இணைந்து சமூக செல்வத்தை கட்டியெழுப்புவோம்’ என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த அழைப்பை ஏற்று கொலம்பியாவிற்கு திரும்பும் அந்நாட்டு மக்கள் அரசு அறிவித்துள்ள திட்டங்களில் இணைந்து தொழில் தொடங்கினால் குஸ்டாவோவின் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டீப்சீக் செயலிக்கு அமெரிக்கா தடை?

முன்னதாக, அமெரிக்கா புலம்பெயர்ந்தோரை குற்றவாளிகளைப் போல நடத்துவதாக விமர்சித்த அதிபர் குஸ்டாவோ, ’புலம்பெயர்ந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல, ஒரு மனிதன் தகுந்த கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்" என்றும் கூறி அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மக்களை ஏற்றி வந்த இரண்டு விமானங்களை கொலம்பியாவில் தரையிறக்க அனுமதி மறுத்தார்.

இதனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் கொலம்பிய அதிகாரிகள் மீதான விசா கட்டுப்பாடுகள், கொலம்பிய இறக்குமதிகள் மீதான வரியை 50% ஆக உயர்த்தும் திட்டம், கொலம்பிய பொருள்களுக்கான சுங்க ஆய்வுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட தொடர்ச்சியான கட்டுப்பாடு நடவடிக்கைகளை அறிவித்தார்.

இருதரப்புக்கும் மத்தியில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து நாடு கடத்தப்பட்ட மக்களை ஏற்றுக் கொள்ள கொலம்பியா ஒப்புக்கொண்டது. அதன் பின்னர் அதிபர் டிரம்ப் கொலம்பியா மீது விதித்த 25 சதவிகித வரியை திரும்பப் பெறுவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது.

கடந்த 2020 முதல் 2024 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மக்களை ஏற்றி வந்த 475 விமானங்களை கொலம்பியா ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!

பரபரப்பான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணேவில் இன்று (ஜன.31) நடைபெற்றது. இந்தப்... மேலும் பார்க்க

ஆன்லைன் மோசடியில் 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது!

நேபாளத்தில் சட்டவிரோதமான கிரிப்டோகரன்சி பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடி ஆகியவற்றில் ஈடுபட்ட 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேபாள காவல் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மக்க... மேலும் பார்க்க

தவெகவும் விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை: ஆதவ் அர்ஜுனா

தவெகவும் விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றி... மேலும் பார்க்க

சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராமின் ‘பறந்து போ’

இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ’பறந்து போ’ திரைப்படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த திரைப்படங... மேலும் பார்க்க

திருமாவளவனை சந்தித்த ஆதவ் அர்ஜுனா!

தவெக கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை இன்று சந்தித்தார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை கட்சியின் விதிகளை மீறி ... மேலும் பார்க்க

ஜிவி பிரகாஷ் குமார் குரலில் வெளியான கிங்ஸ்டன் பட பாடல்!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்க... மேலும் பார்க்க