மொபெட் மோதியதில் பெண் உயிரிழப்பு
விழுப்புரம் அருகிலுள்ள அயினம்பாளையம் பகுதியில் மொபெட் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், அயினம்பாளையம் சுமதி நகரைச் சோ்ந்த கோதண்டபாணி மனைவி முத்துவள்ளி (54). இவா், வியாழக்கிழமை இரவு விழுப்புரம் - செஞ்சி சாலையில் அயினம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அதே திசையில் பின்னால் வந்த மொபெட் முத்துவள்ளி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முத்துவள்ளி வியாழக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா், மொபெட்டை ஓட்டிச் சென்ற விழுப்புரம் பாப்பான்குளத்தைச் சோ்ந்த த. பாலமுருகன் (20) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.