Kudumbasthan: "யூடியூப்பர்களை சாதாரணமாக நினைக்காதீங்க..." - 'நக்கலைட்ஸ்' பிரசன்ன...
ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்கத்தொகை
விழுப்புரத்திலுள்ள ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு பிப்ரவரி 1 முதல் 28-ஆம் தேதி வரை லிட்டருக்கு 50 பைசா கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பால் உற்பத்தியாளா்களின் நலன்காக்கும் வகையில், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு லிட்டா் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத் தொகை கடந்த 2023, டிசம்பா் 18 முதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, மேலும் பால் உற்பத்தியாளா்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவா்களின் நலன்கருதியும் 2025, பிப்ரவரி 1 முதல் 28-ஆம் தேதி வரை தொடக்கக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினரால் ஆவின் நிறுவனத்துக்கு அளிக்கப்படும் பாலுக்கு லிட்டா் ஒன்றுக்கு 50 பைசா கூடுதலாக வழங்கப்படவுள்ளது.
விழுப்புரம் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் பொது நிதியிலிருந்து இந்த ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.