செய்திகள் :

அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி! இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!

post image

அமெரிக்கா அமல்படுத்தியுள்ள பரஸ்பர வரிவிதிப்பின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை காலை சரிவுடன் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்னதாக, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புதன்கிழமை மாலை லாபத்தில் முடிவடைந்தன.

இன்று அதிகாலை வரிவிதிப்பு அமலுக்கு வந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியது. தற்போது, நிஃப்டி 49.90 புள்ளிகள் சரிந்து 23,282.45 ஆகவும், சென்செக்ஸ் 193.68 புள்ளிகள் சரிந்து 76,423.76 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

நிப்ஃடி ஐடி பங்குகள் 2.5 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. இதனிடையே நிஃப்டி பார்மா குறியீடு 4 சதவிகிதம் அதிகரித்து விற்பனையாகி வருகின்றது.

இதையும் படிக்க : வர்த்தகப் போர்!! அமெரிக்காவுக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு!

பார்மா பங்குகள் 11 சதவிகிதத்திற்கு மேல் சரிவுடன் முடிவு!

புதுதில்லி: டிரம்ப் நிர்வாகம் விரைவில் மருந்து இறக்குமதி மீதான வரிகளை அறிவிக்க உள்ளதாக வெளியான தகவலையடுத்து, மருந்து நிறுவனங்களின் பங்குகள் இன்று 11 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்து முடிந்தது.மருந்து... மேலும் பார்க்க

மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!

மும்பை: மகாத்மா காந்தி வரிசையில் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.இந்த தாள்களின் வடிவமைப்பு மகாத்மா காந்தி வரிசையில் தற்போது உள்ள ரூ.10 மற்று... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.85.25 ஆக முடிவு!

மும்பை: வர்த்தக கட்டண கவலைகளுக்கு மத்தியில், அச்ச உணர்வு காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 5 காசுகள் உயர்ந்து ரூ.85.25 ஆக முடிந்தது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சி; 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த நிஃப்டி

மும்பை: வணிகத்தின் இறுதிநாளான வெள்ளிக்கிழமை காலை வணிகம் தொடங்கியபோதே, தகவல்தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சியால், வணிகமும் சரிவுடன் காணப்பட்டது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி வ... மேலும் பார்க்க

தடாலடியாகக் குறைந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,280 குறைந்துள்ளது.இந்த வாரத்தின் தொடக்கம் முதல் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், ஒரே நாளில் வீழ்ச்சி அடைந்ததால... மேலும் பார்க்க

அமெரிக்க பரஸ்பர வரி.. மீண்டெழுந்த பங்குச் சந்தைகள்

அமெரிக்கா அறிவித்த பரஸ்பர வரிவிதிப்பு எதிர்பார்க்கப்பட்டதைவிடவும் குறைவாக இருந்த நிலையில், பங்குச் சந்தைகள் இன்றைய வணிகத்தின் போது மீண்டெழுந்துள்ளன.வியாழக்கிழமை காலை சரிவுடன் வணிகம் தொடங்கிய நிலையில்,... மேலும் பார்க்க