அமெரிக்க வரி விதிப்பால் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!
பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பால் உந்தப்பட்டு, முந்தைய அமர்வில் 2% சரிவைத் தொடர்ந்து, இன்றைய காலை நேர வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை சற்று நிலையாக இருந்தது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் பியூட்டர்ஸ் விலை 19 சென்ட்ஸ் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு $68.83 ஆக இருந்தது. அதே வேளையில், மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் விலை 26 சென்ட்ஸ் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு $66.83 ஆக உள்ளது. இது 0.39% அதிகரிப்பு.
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக், நேற்று வெளியிடப்பட்ட அதன் 2025 உலக எண்ணெய் கண்ணோட்டத்தில், சீன தேவை குறைந்து வருவதால், 2026 முதல் 2029 வரையிலான உலகளாவிய எண்ணெய் தேவைக்கான அதன் கணிப்பை குறைத்தது.
2026ல் உலகளாவிய தேவை நாள் ஒன்றுக்கு சராசரியாக 106.3 மில்லியன் பீப்பாய்கள் இருக்கும் என்று ஒபெக் தெரிவித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட 108 மில்லியன் பீப்பாயை விட குறைவு என்றது.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 35% வரி விதிப்பை அறிவித்தார். மேலும் அமெரிக்கா மற்ற பெரும்பாலான வர்த்தக கூட்டாளிகள் மீது 15% அல்லது 20% மொத்த வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஐடி, ஆட்டோ பங்குகளின் சரிவை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!