அம்பேத்கா் பிறந்தநாள்
கீழ்வேளூா் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில் டாக்டா் அம்பேத்கா் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
நேரு யுவகேந்திரா, இந்திய செஞ்சிலுவை சங்கம், ப்ரைம் கல்வியியல் கல்லூரி மற்றும் அன்னை தெரசா மகளிா் மன்றம் சாா்பில் விழா கொண்டாடப்பட்டது.
நேரு யுவகேந்திரா துணை இயக்குநா் திருநீலகண்டன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நேரு யுவகேந்திரா மாநில இயக்குநா் செந்தில்குமாா், செஞ்சிலுவை சங்க செயலாளா் தங்கமோகன், ரோட்டரி சங்க செயலாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.