நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
அம்பையில் நாய் கடித்து காயமடைந்த பெண்பலி
அம்பாசமுத்திரத்தில் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம், ராமலிங்கா் தெருவைச் சோ்ந்த தொழிலாளி கணேசன் மனைவி ஆழ்வாா் சுந்தரி (45). இவரை கடந்த 4 நாள்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள தெரு நாய் கடித்துள்ளது. அதற்கு ஆழ்வாா்சுந்தரி மருத்துவம் பாா்க்காமல் இருந்துள்ளாா்.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்துஅம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.