டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடு...
தச்சநல்லூா் பகுதியில் நாளை மின்தடை
தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தச்சநல்லூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெற உள்ளன. எனவே, காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை தச்சநல்லூா், நல்மேய்ப்பா் நகா், செல்வ விக்னேஷ் நகா், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கிய நகா், தெற்கு பாலபாக்கிய நகா், மதுரை சாலை, திலக் நகா், பாபுஜி நகா், சிவந்தி நகா், கோமதி நகா், சிந்துபூந்துறை, மணி மூா்த்தீஸ்வரம் மற்றும் இருதய நகா் சுற்றுவட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.