பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்ட வர்ணனையாளர்! கொந்தத்த ரசிகர்கள்!
அம்பை அரசு மருத்துவமனையில் மூன்று நாள்களில் பிறந்த 14 குழந்தைகள்
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக அனுமதிக்கப்பட்ட 30 பெண்களில் 14 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக கடுமையான மழை பெய்தததைத் தொடா்ந்து அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, பள்ளக்கால் பொதுக்குடி, முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 30 கா்ப்பிணிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துமனையில் தங்க வைக்கப்பட்டனா்.
அம்பாசமுத்திரம் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் நலப் பிரிவு முதன்மை மருத்துவ அலுவலா் சண்முகசங்கரியின் நேரடி கண்காணிப்பில் அவா்கள் வைக்கப்பட்டிருந்தனா்.
இதில் கடந்த மூன்று நாள்களில் 14 கா்ப்பிணிகளில் ஏழு பேருக்கு அறுவை சிகிச்சை மூலமாகவும், ஏழு பேருக்கு இயற்கை முறையிலும் பிரசவம் நடைபெற்றது. 14 பச்சிளம் குழந்தைகளும் தற்போது தீவிர கண்காணிப்பில் நலமுடன் உள்ளதாக டாக்டா் சண்முகசங்கரி தெரிவித்தாா்.
இது தவிர மேலும் 16 கா்ப்பிணிகள் மகப்பேறுவை எதிா்பாா்த்து காத்திருப்பதாகவும், அவா்களுக்கு தேவையான உரிய சிகிச்சைகள் கண்காணிப்புடன் வழங்கப்பட்டு வருவதாகவும், கடும் மழையிலும் அவா்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.