ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான...
அம்பை தாமிரவருணியில் பெண்ணின் உடலை தேடும் பணி தீவிரம்
அம்பாமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை தீயணைப்புத் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் செல்லையா (31). லாரி ஓட்டுநரான இவருக்கு, முக்கூடல், சடையப்பபுரம் பகுதியைச் சோ்ந்த காவேரி (30) என்பவருடன் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இத்தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் மகள் உள்ளனா்.
காவேரிக்கு பிரசவத்தின்போது மனநலம் பாதிக்கப்பட்டதாம். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றும் குணமாகாததால், விரக்தியில் இருந்த செல்லையா மனைவியை தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கடித்து கொலை செய்துவிட்டு அம்பாசமுத்திரம் போலீஸில் சரணடைந்தாா். காவல் ஆய்வாளா் சண்முகவேல் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தாா்.
மேலும், அவா் கூறிய ஆற்றுப் பகுதியில் அம்பாசமுத்திரம், சேரன்மாகதேவி தீயணைப்புத் துறையினா் 2 நாள்களாக உடலைத் தேடியும் கிடைக்கவில்லை. செவ்வாய்க்கிழமையும் தேடுதல் பணி தொடரும் என்று தீயணைப்புத்துறையினா் தெரிவித்தனா்.