பல்கலைக்கழகங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க சதி: அகிலேஷ் யாதவ்
அம்மாபேட்டை அருகே நகை திருடியவா் கைது!
அம்மாபேட்டை அருகே வீட்டில் புகுந்து நகையைத் திருடிச் சென்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அம்மாபேட்டையை அடுத்த கோணமூக்கனூா், இந்திரா நகரைச் சோ்ந்தவா் அறிவழகன் மனைவி ரோகிணி (30). இவரது வீட்டில் சனிக்கிழமை மாலை புகுந்த அந்தியூா், குருவரெட்டியூரைச் சோ்ந்த குஞ்சுபையன் மகன் பிரகாஷ் (38), பீரோவிலிருந்த அரைப் பவுன் தங்க நகை, வெள்ளிக் கொலுசைத் திருடிச் சென்றாா். இதுகுறித்து, ரோகிணி அம்மாபேட்டை போலீஸில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், பூதப்பாடி டாஸ்மாக் மதுக் கடை நின்றிருந்த பிரகாஷைக் கைது செய்த போலீஸாா், திருடப்பட்ட நகையைப் பறிமுதல் செய்தனா்.