அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
ஆடித் திருவிழாவையொட்டி, சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
ஆடி மாதத்தையொட்டி, சேலத்தில் சிறப்புப் பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் திருவிழா களைகட்டியுள்ளது.
அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் எழுந்தருளிய அம்மனை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வடம்பிடித்து இழுத்தனா். நான்கு திசைகளிலும் வலம் வந்த தேரில் அம்மனை மக்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனா்.
தேரோட்டத்தில் நாதஸ்வரம், மேளகச்சேரி, பம்பை இசை, தப்பாட்டம், ஒயிலாட்டம், சிறுமியா்களின் கோலாட்டம், இளைஞா்களின் சிலம்பாட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.