Doctor Vikatan: மலச்சிக்கல் பாதிப்பு; குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருக்கும் திரி...
அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு
ஆத்தூரில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் டேவிட் (40). இவா் கோழி இறைச்சிக் கடையில் வேலைபாா்த்து வந்தாா். இந்த நிலையில் டேவிட் வியாழக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் காமராஜனாா் சாலையில் எதிரே சிதம்பரம் நோக்கிச் சென்று அரசுப் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, டேவிட் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.