செய்திகள் :

அயோத்தி ராமர் கோயில்: 5.5 கோடி பக்தர்கள் வருகை!

post image

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு 5.5 கோடி பக்தர்கள் வருகை தந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது.

இந்தக் கோயிலுக்கு, நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், கோயிலின் முதல் நாளிலிருந்து இதுவரையில் உலகம் முழுவதிலும் இருந்து 5.5 கோடி பக்தர்கள் வருகை தந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என கிட்டத்தட்ட 4.5 லட்சம் முக்கிய பிரமுகர்கள் வருகைதந்து, கோயிலில் மரியாதை செலுத்தியதாகவும் தெரிவித்தது.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், நிர்வாகப் பணிகள் மட்டுப்படுத்தப்படவில்லை என்று கூறியது. முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவருக்குமான தரிசனத்துக்கான ஏற்பாடுகள், சுமூகமான வருகை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

உலகளவில் ஒரு முக்கிய மத ஆலயமாக அயோத்தி திகழ்வதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நெகிழ்ச்சியுடன் கூறினார். வரும் காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!

ஹைதராபாத்தில் தெலுங்கு பெண் பத்திரிக்கையாளர் சடலமாக மீட்பு

தெலங்கானாவில் பிரபல தெலுங்கு பெண் பத்திரிகையாளர் ஸ்வேசா அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, 35 வயதான அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 18 வங்கதேசத்தினர் கைது!

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பதினெட்டு வங்கதேச நட்டவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் ஐந்து பேர் திருநங்கைகள்போல் மாறுவேடமிட்டு வசித்து வந்ததாகப் போலீஸார் தெரிவ... மேலும் பார்க்க

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கொல்கத்தா கல்லூரி பாதுகாவலர் கைது

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கல்லூரி பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்... மேலும் பார்க்க

ஜெய்ஷ் பயங்கரவாதிகள் எங்கே? ட்ரோன்.. மோப்ப நாய்கள்.. 3வது நாளாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் பதுங்கியுள்ள 3 ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் 3-வது நாளாக இன்று (ஜூன் 28) ஈடுபட்டுள்ளனர். உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கார் வனப்பக... மேலும் பார்க்க

காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி: அஸ்ஸாம் முதல்வர்!

அஸ்ஸாம் குவாஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி கட்டப்படும் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காமாக்யா கோயிலுக்கு அஸ்ஸா... மேலும் பார்க்க

பைசா செலவில்லாமல் விண்வெளி சென்ற ராகேஷ் சர்மா! சுபான்ஷு சுக்லாவுக்கு ரூ.544 கோடி செலவு ஏன்?

ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்துக்கு ஒரு ரூபாய்கூட செலவு ஏற்படவில்லை. ஆனால், சுபான்ஷு சுக்லாவுக்கு மட்டும் ஏன் செலவழிக்கப்படுகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.சர்வதேச விண்வெளி நிலையத்து... மேலும் பார்க்க