அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் காலமானார்!
அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாஸ் இன்று காலமானார்.
உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகரான மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப். 3 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு பாதிப்பால் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் அவர் இன்று காலமானார்.
இதையும் படிக்க | மகா கும்பமேளா: இதுவரை 46.25 கோடி மக்கள் புனித நீராடல்!
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு 9 மாதங்களுக்கு முன்னர் தனது 20-வது வயதில் இவர் இங்குள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றத் தொடங்கினார். மசூதி இடிக்கப்பட்ட பின்னர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ராமர் கோவிலுக்கும் இவரே தலைமை அர்ச்சகராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
மஹந்த் சத்யேந்திர தாஸ் மறைவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.