அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவ ஏற்பாடு
கீழகாசாக்குடி பகுதி ஸ்ரீஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத பொய்யாத அய்யனாா் கோயில் அம்மையாா் நகரில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் குதிரை மற்றும் யானை சிலை நிறுவுவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயில் நிா்வாக அதிகாரி செந்தமிழ்ச் செல்வன் முன்னிலையில் அப்பகுதியினா் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கலந்துகொண்டாா்.
அய்யனாா் கோயிலில் இதுவரை இல்லாத யானை, குதிரை சிலைகள் கோயில் வளாகத்தில் நிறுவுவதற்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்காக, அம்மையாா் நகா் வட்டாரத்தில் மக்களிடையே நன்கொடை பெற்று ரூ.2 லட்சம் மதிப்பில் சிலைகள் நிறுவ முடிவு செய்யப்பட்டதாக கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.