பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு
அரக்கோணம்: தண்டவாளத்தில் ஜல்லிக் கற்கள்! தீவிர விசாரணை!
அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் ஜல்லிக்கற்களை போட்டு தண்டவாளங்களை இணைய விடாமல் தடுத்து ரயிலை கவிழ்க்க நடந்த சதி அம்பலமாகியுள்ளது.
அரக்கோணம் - செங்கல்பட்டு இருப்புப் பாதை மேல்பாக்கம் ரயில்நிலையப்பகுதியில் பிரதான பாதையில் இருந்து பிரிந்து செல்கிறது. இப்பகுதியில் பாதை பிரிப்பில் தண்டவாளங்கள் தனித்தனியே பிரிய இணைப்புத் தண்டவாளம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இணைப்பு பகுதியில் மா்மநபா்கள் ஜல்லிகற்களை போட்டு இருப்பதை பணியாளா்கள் கண்டறிந்தனா்.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற இருப்புப் பாதை பராமரிப்புப் பிரிவு அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினா், தமிழக ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து அந்த இணைப்பில் இருந்த கற்கள் அகற்றப்பட்ட நிலையில் தண்டவாள இணைப்பு சரி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினா், ரயில்வே போலீ,ாருடன் இணைந்து சுற்றுவட்டார கிராமங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏற்கெனவே திருவாலங்காடு ரயில்நிலையம் அருகே தண்டவாள இணைப்பில் இருந்த ஃபிஷ் பிளேட்டுகளை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்று அது கண்டறியப்பட்ட நிலையில் மேல்பாக்கம் ரயில்நிலையம் அருகே தண்டவாளம் மாறும் பகுதியில் ஜல்லிக்கற்களை போட்டு போக்குவரத்தில் சிக்கல் ஏற்படுத்த மேலும் ஒரு சதி நடந்திருப்பது ரயில்வே மற்றும் காவல் துறை அதிகாரிகளை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.