அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு
பெரம்பலூா் பெரிய ஏரியின் மையப் பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை 2 ஆம் கால யாகபூஜை தொடங்கி பூா்ணாஹூதியுடன் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னா், திருக்கோயில் வலம் வந்து விநாயகா் சன்னதியை அடைந்து மங்கள வாத்தியம் முழங்க மகா குடமுழுக்கு நடைபெற்றது. பூஜைகளை கௌரி சங்கா், முல்லைவேந்தன் மற்றும் சஞ்சீவி குழுவினா் செய்தனா். பின்னா், அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.