செய்திகள் :

"அரசியலில் என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது!" - சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்

post image

தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்தும், 'தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்' என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் வாசலில் 10 நாட்களாக இரவும் பகலுமாக போராடி வருகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,

தே.மு.தி.க வெளியிட்ட படம்

போராட்டக் களத்திலுள்ள தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தவர் "இந்த நகரம் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு காரணம் மக்கள்நலப் பணியாளர்கள் தான். மழை பெய்யும் போது கூட அவர்கள் போராட்டத்தை தொடர்கிறார்கள். அரசாங்கம் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிய அவர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களின் கோரிக்கைக்கு நாங்கள் துணை நிற்போம். முதல்வர் ஏன் இதுவரை வந்து சந்திக்கவில்லை என்ற கேள்வி ஆளும் தரப்பில் தான் கேட்க வேண்டும். அமைச்சர்கள் வந்து பேசுகிறார்கள் தவிர அவர்களை கோரிக்கை நிறைவேற்றவில்லை. மனிதாபிமானத்தின் அடிப்படையில் பிரச்னைக்கு அரசு முடிவை ஏற்படுத்த வேண்டும்." என்றார்.

விஜயகாந்த் படத்தை எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்ற தே.மு.தி.க-வின் அறிவிப்பு குறித்த கேள்விக்கு, "அரசியலில் எங்களுக்கு மானசீக குரு கேப்டன்தான். அவரது படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், சுவரொட்டிகளிலும் சமூக வலைதளங்களில் கேப்டன் படத்தைப் பயன்படுத்துவதைத்தான் நாங்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறோம்" என விளக்கமளித்தார்.

ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா
ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடன் இணைந்து பிரேமலதா விஜயகாந்த்தின் படத்தை வெளியிட்டிருந்தார் தே.மு.தி.க பொருளாளர் சுதீஷ். அதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, " ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல, ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கலைஞர், ஒரு கேப்டன் தான். அவர்களின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அதேபோல் ஒரு பிரேமலதா விஜயகாந்த் தான். என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது" என அடித்துச் சொன்னார்.

ஓரிரு மாதங்கள் முன்புவரை அ.தி.மு.க கூட்டணியிலிருந்த தே.மு.தி.க, ராஜ்ய சபா சீட் தராத வருத்தத்தில் கூட்டணியை முறித்துக் கொண்டது. தி.மு.க-வுடம் தொகுதி பேரம்வரை பேசப்படுவதாகச் சொல்லப்படும் சூழலில், ஜெயலலிதா படத்துடன் இணைந்து எடிட் செய்யப்பட்ட படத்தை வெளியிடுகிறர்கள். இதன்மூலம் தே.மு.தி.க எந்த பக்கம் சாயும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

"நமது ஜனநாயகம் என்பது ஒரு தானியங்கி கருணாலயம் அல்ல" - எதிர்க்கட்சி MP-க்கள் கைதுக்கு கமல் கண்டனம்

பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கை, வாக்காளர் பட்டையில் குளறுபடிகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.ப... மேலும் பார்க்க

"தூய்மைப் பணியாளர்களை நடுத்தெருவுக்கு தள்ளிய திமுக; வாக்குறுதி எண் 153..." - ஆதரவு தெரிவித்த விஜய்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 11-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், தனியாரிடம் வேலையை ஒப்படை... மேலும் பார்க்க

Vijay: 'எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது' - தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய் டெல்லியில் எம்.பி-க்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், ... மேலும் பார்க்க