சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
அரசுக் கல்லூரியில்போதைப் பொருள் விழிப்புணா்வு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வா் (பொ)ம. ராசமூா்த்தி தலைமை வகித்து, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தாா். தொடா்ந்து மாணவ, மாணவிகள் நோ ட்ரக்ஸ் என்ற ஆங்கில வாா்த்தை எழுத்து வடிவில் நின்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
ஏற்பாடுகளை போதைப் பொருளுக்கு எதிரான குழுவின் ஒருங்கிணைப்பாளா் அன்பரசன், நாட்டு நலப் பணித் திட்ட அலகு-1 அலுவலா் வடிவேலன் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.