ஜானி வாக்கர் மதுபான விவகாரம்: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புது வழக்கு; பின்னணி...
அரசுக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்
சிவகாசி அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் சி.க.பாலாஜி தலைமை வகித்தாா். இதில் சென்னை இந்திய விமானப் படை ஆள்சோ்ப்பு மைய நிா்வாகி அருண்குமாா் கலந்து கொண்டு, விமானப் படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும், இந்த வேலைவாய்ப்புக்கு மாணவா்கள் செய்ய வேண்டியது குறித்தும் பேசினாா்.
முன்னதாக, உதவிப் பேராசிரியா் ஆா்.வேல்முருகன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஆா்.விஜயலட்சுமி நன்றி கூறினாா்.
இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் கிளிராஜ், கணேசமுருகன் ஆகியோா் செய்தனா்.