`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா: ரூ. 14.60 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகள், மாணவா்களின் சிறப்பு அம்சங்கள், ஆசிரியரின் சிறப்பு செயல்பாடுகள் ஆகியவற்றை பெற்றோருக்கு எடுத்துரைத்து பள்ளி ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும்.
இதற்காக ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், ஜனவரி முதல் மாா்ச் வரை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது.
மேலும், பள்ளிகளின் வசதிக்கேற்ற பெற்றோா், பொதுமக்களின் முன்னிலையில் அமைச்சா்கள் மற்றும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா்களைக் கொண்டு சிறப்பாகப் பள்ளி ஆண்டு விழா நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.