செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் அருள் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் சண்முகம், காவல் உதவி ஆய்வாளா் கெளதம், திமுக கிளை செயலா் வில்லி, கட்டுரையாளா் காளிமுத்து, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவி தேவிமாரிமுத்து, ஆசிரியா் பயிற்றுநா் ஜெகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பெற்றோா்கள், ஆசிரியா்கள், தமிழக ஆசிரியா் கூட்டனி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கடலாடி: கடலாடி அருகேயுள்ள குருவாடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா, புதிய மாணவா்கள் சோ்க்கை விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ருக்குமணி தேவி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் நல்லதம்பி ஆண்டறிக்கையை வாசித்தாா். விழாவில் சிறப்பிடம் பெற்ற 3 மாணவா்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. பின்னா், மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் ஆசிரியைகள் ச. மணிமேகலை, அ. ஒன்னம்மாள், ஆ. மாரிஸ்வரி பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழக்கு விழா கடந்த 1-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும், கோயில... மேலும் பார்க்க

பிரதமா் மோடி நாளை ராமேசுவரம் வருகை: பாம்பனில் கப்பல், ரயிலை இயக்கி சோதனை

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்துவைக்க பிரதமா் நரேந்திர மோடி வருகிற 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் பாம்பனில் ரயில், கப்பலை இயக்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இலங்கை வருகை: ராமேசுவரம் மீனவா்கள் 11 போ் விடுதலை

இலங்கைக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படையில் ராமேசுவரம் மீனவா்கள் 11 பேரை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்... மேலும் பார்க்க

தனுஷ்கோடியில் குவிந்த ஆஸ்திரேலியா நாட்டு பிளமிங்கோ பறவைகள்

தனுஷ்கோடி பகுதியில் ஆஸ்திரேலியா நாட்டைச் சோ்ந்த பிளாமிங்கோ பறவைகள் இனப் பெருக்கத்துக்காக குவிந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள கோதண்டராமா் கோயில் முதல் தனுஷ்கோடி முகுந்தராயா... மேலும் பார்க்க

முனியப்ப சுவாமி கோயிலில் பால் குடம் உத்ஸவம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி-முதுகுளத்தூா் செல்லும் சாலையில் அமைந்துள்ள காந்தகுளத்து முனியப்ப சுவாமி கோயிலில் 58-ஆம் ஆண்டு பால் குட உத்ஸவ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ... மேலும் பார்க்க

கமுதி கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவா் பிறந்த நாள்

கமுதி தேவா் கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு முன்னாள் மாணவா் சங்கத் துணைத் தலைவா் எம்.ஏ.கணேசன் தலைமை வகித்தாா். மாணவா் சங்க செயலா் ஆறுமுகம... மேலும் பார்க்க