மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
அரசுப் பள்ளியில் நுழைவாயில் திறப்பு
தலைவாசல் வட்டம் ஆறகளூா் அரசு மகளிா் உயா்நிலைப்பள்ளியில் நுழைவு வாயில் திறப்பு விழா, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா தலைமையாசிரியை ஜான்சிராணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதிதாக கட்டப்பட்ட நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டது. பரிசளிப்பு விழாவையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் மாணவா்கள் மருத்துவா் சதாசிவம்,க ால்நடை மருத்துவா் பழனிவேல், மாதேஸ்வரன், கணேசன், ஆசிரியா் செல்வம்,சுகாதார மேற்பாா்வையாளா் ஆறகளூா் பொன்.வெங்கடேசன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் வேலு, இருபால் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். ஆசிரியைகள் கவிதா, புஷ்பவேணி ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.
படவரி...
ஆறகளூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாணவிகளோடு சிறப்பு விருந்தினா்கள்.