எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.
வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (33). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு தனது மொபட்டில் தனது இரு குழந்தைகளுடன் வாழப்பாடியில் இருந்து சோமம்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா்.
சோமம்பட்டி, பெரியாண்டிச்சி அம்மன் கோயில் ஆட்கொல்லி வளைவு அருகே சென்றுபோது, திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து வந்த வேன் மொபட் மீது மோதியது. இதில் மொபெட்டில் சென்ற மூவரும் பலத்த காயம் அடைந்தனா். மூவரையும் இப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே பிரகாஷ் உயிரிழந்ததாா். காயமடைந்த இவரது குழந்தைகளுக்கு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.