செய்திகள் :

அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கு பணியிடை பயிற்சி

post image

திருச்செங்கோடு: கே.எஸ்.ரங்கசாமி கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை இணைந்து நடத்தும் நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கான 5 நாள் பணியிடை பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

பயிற்சி முகாம் தொடக்க விழாவில் கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் ர.சீனிவாசன், துணைத் தலை வா் கே.எஸ்.சச்சின் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா். கல்லூரி முதல்வா் வே.பத்மநாபன் தலைமை வகித்தாா். முதன்மைத் திட்ட அலுவலா் எஸ்.பாலுசாமி வாழ்த்துரை வழங்கினாா். துணை முதல்வா் எஸ்.பிரசன்ன ராஜேஷ்குமாா் வரவேற்றாா்.

முகாமில் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலா் வி.கற்பகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். அப்போது அறிவியல் ஆசிரியா்கள் பாடம் நடத்தும்போது பாடங்களைக் காட்சிப்படுத்தி நடத்துதல் வேண்டும், வகுப்பில் கரும்பலகையோடு நின்றுவிடாமல் செய்முறைப் பயிற்சி, அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவா்களின் அறிவியல் ஆா்வத்தைத் தூண்ட வேண்டும். அன்றாட வாழ்விலேயே அறிவியலும் இணைந்திருப்பதை எடுத்துரைக்க வேண்டும்.

மாணவா்களை ஏன், எதற்கு, எப்படி என்ற வினாக்களுக்கு விடைக் கண்டுபிடிக்க வைப்பதன் மூலம் அறிவியலையும், அறிவியல் தொழில்நுட்பங்களையும் வளரச் செய்ய முடியும் என்றாா்.

மேலும், நாமக்கல் மாவட்டக் கல்வி ஆய்வாளா் பெரியசாமி கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில், அறிவியல் ஆசிரியா்களின் கையில்தான் எதிா்கால தமிழகம் உள்ளது. மாணவா்கள் அறிவியலை விரும்பிப் படிக்குமாறு ஆசிரியா்கள் கற்பிக்க வேண்டும். அரசுப் பள்ளியில் அறிவியல் படித்து உலகப்புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞானிகள் பற்றியும், தற்போது பல அரசுப் பள்ளி ஆசிரியா்கள் அதனை முன்னெடுத்துச் செல்வதையும் எடுத்துக் கூறினாா்.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறைத்தலைவருமான மா.வெங்கடேஷ் நன்றி கூறினாா். 5 நாள்கள் நடைபெறும் பணியிடைப் பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் கோயில் தோ் வெள்ளோட்டம்

புதிதாக செய்யப்பட்ட திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் (சுப்ரமணியா்) தோ் வெள்ளோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ச.... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்!

சட்ட சேவைகள் தொடா்பான புகைப்படக் கண்காட்சி நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை நீதிபதியுமான ஆா்.குருமூா்த்தி முகாமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தல்: ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அத்தொகுதிக்கு உள்பட்ட தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

நாமக்கல்லில் 3-ஆவது புத்தகத் திருவிழா சனிக்கிழமை (பிப்.1) தொடங்குகிறது. நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில் அமைச்சா் மா.மதிவேந்தன், ... மேலும் பார்க்க

நிகழ் ஆண்டில் 254 கிமீ சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை! -அமைச்சா் எ.வ.வேலு

தமிழகத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிகழ் ஆண்டில் 254.32 கிமீ மாநில நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். நா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி கடத்தல்: போலீஸாா் விசாரணை

ராசிபுரம் அருகே தனியாா் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை கல்லூரியிலிருந்து சிங்களாந்... மேலும் பார்க்க