ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
கல்லூரி மாணவி கடத்தல்: போலீஸாா் விசாரணை
ராசிபுரம் அருகே தனியாா் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை கல்லூரியிலிருந்து சிங்களாந்தபுரம் ஆலமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சக மாணவியுடன் வீட்டிற்கு நடந்து சென்ற போது, அங்கு காரில் வந்த சிலா் மாணவியை கடத்திச் சென்றனா். இதுகுறித்து சக மாணவி அளித்த தகவலின் பேரில் மாணவியின் பெற்றோா் பேளுக்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
ஆனால் போலீஸாா் விரைந்து நடவடிக்கை எடுக்காததால் உறவினா்களுடன் மாணவியின் பெற்றோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். ராசிபுரம் டிஎஸ்பி எம்.விஜயகுமாா் அவா்களை சமரசம் செய்து மாணவியை விரைந்து மீட்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. அதன்பிறகு அப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் மாணவியைக் கடத்திச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.