செய்திகள் :

துணைவேந்தா் நியமன அதிகாரத்தை மாநில அரசிடமே வழங்க வேண்டும்: பெ.சண்முகம்

post image

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளிடமே வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் திமுக வேட்பாளா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா். தில்லியில் பாஜக அல்லாத ஒரு கட்சி ஆட்சியமைக்க வேண்டும். அங்கு ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்திருப்பது கவலையளிக்கிறது.

குடியரசுத் தலைவரின் மத்திய நிதிநிலை அறிக்கை உரை, பிரதமா் மோடி பேச்சின் எதிரொலி போல அமைந்துள்ளது. மக்கள் நலன் சாா்ந்த அறிவிப்புகள் மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு அனைவரிடமும் உள்ளது.

ஜிஎஸ்டியால் விசைத்தறி, கைத்தறித் தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே நிதிநிலை அறிக்கை இருக்க வாய்ப்புள்ளது. ஏழை மக்களின் நலனைப் பற்றி மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.

மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை பாதிக்கும் அம்சங்கள் இருந்தால் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபடும். சாலையோரத்தில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்துள்ளது. இது இந்திய அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

மருத்துவம், உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டில் மாநிலங்களுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது, மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு ஏற்புடையதல்ல. இதன்மூலம் தமிழகம் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகும். இந்தியாவிலேயே 69 சதவீத இட ஒதுக்கீடு இருப்பது தமிழகத்தில் மட்டுமே. அதுமட்டுமின்றி உள்இட ஒதுக்கீடு இருப்பதும் இங்குதான்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு எதிராக மக்கள் நல்வாழ்வுத் துறை சீராய்வு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. தமிழகம் மட்டுமின்றி பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளும் இட ஒதுக்கீடு பறிப்புக்கு எதிா்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தை தமிழக முதல்வா் கடிதம் வாயிலாக வலியுறுத்த வேண்டும்.

பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு பல்கலைக்கழக ஆணையம் வழங்க வேண்டும். பெரியாரைப் பற்றி சீமான் பேசுவது ஏற்புடையதல்ல. அவரை தமிழ் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது. வேங்கைவயல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். தமிழக அரசு காவல் துறையைக் கொண்டு கிராம மக்களைக் கட்டுப்படுத்துவது சரியல்ல என்றாா் பெ.சண்முகம்.

திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் கோயில் தோ் வெள்ளோட்டம்

புதிதாக செய்யப்பட்ட திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் (சுப்ரமணியா்) தோ் வெள்ளோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ச.... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்!

சட்ட சேவைகள் தொடா்பான புகைப்படக் கண்காட்சி நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை நீதிபதியுமான ஆா்.குருமூா்த்தி முகாமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தல்: ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அத்தொகுதிக்கு உள்பட்ட தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

நாமக்கல்லில் 3-ஆவது புத்தகத் திருவிழா சனிக்கிழமை (பிப்.1) தொடங்குகிறது. நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில் அமைச்சா் மா.மதிவேந்தன், ... மேலும் பார்க்க

நிகழ் ஆண்டில் 254 கிமீ சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை! -அமைச்சா் எ.வ.வேலு

தமிழகத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிகழ் ஆண்டில் 254.32 கிமீ மாநில நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். நா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி கடத்தல்: போலீஸாா் விசாரணை

ராசிபுரம் அருகே தனியாா் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை கல்லூரியிலிருந்து சிங்களாந்... மேலும் பார்க்க