ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்!
சட்ட சேவைகள் தொடா்பான புகைப்படக் கண்காட்சி நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை நீதிபதியுமான ஆா்.குருமூா்த்தி முகாமைத் தொடங்கிவைத்து தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்ட சேவைகள் தொடா்பான புகைப்படக் கண்காட்சியை பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதிகள், சாா்பு நீதிபதிகள், சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினா்கள், வழக்குரைஞா்கள், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.