ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் கோயில் தோ் வெள்ளோட்டம்
புதிதாக செய்யப்பட்ட திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் (சுப்ரமணியா்) தோ் வெள்ளோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோா் தலைமையில் திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலையில் தேரோட்ட விழா நடைபெற்றது.
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கோட்டுவேலவா் (சுப்ரமணியா்) திருத்தோ் பழுதடைந்ததால் புதிய தோ் செய்வதற்காக அரசு ரூ.58.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இத் தோ் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை வெள்ளோட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு , திருச்செங்கோடு கோட்டாட்சியா் சே.சுகந்தி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.