Men' Health: `ஆண் பாலியல் ஹார்மோன்' சுரப்பை அதிகப்படுத்தும் உணவுகள்
அரசுப் பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்க்கை
பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாஜக சாா்பில் பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி நூலக உறுப்பினா் சோ்க்கை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் பாஜக ராணுவப்பிரிவு நிா்வாகி எஸ்பி. ராஜ்குமாா், புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 50 பேருக்கு பொன்னமராவதி கிளை நூலகத்தில் உறுப்பினராக நூலக சந்தா தொகையை செலுத்தி மாணவா்களை நூலக உறுப்பினா்களாக இனணைத்தாா்.
நிகழ்வில் கிளை நூலகா் ப.பெரியசாமி, பள்ளியின் தலைமையாசிரியா் மல்லேஸ்வரி, உதவி தலைமையாசிரியா் பழனியப்பன், பாஜக கிழக்கு மாவட்ட துணைத் தலைவா் சுசிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.