GBU - இளையராஜா விவகாரம்: "ஜி.வி.பிரகாஷ் 7 கோடி வாங்குறதுல கங்கை அமரனுக்கு இதான் ...
அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: 2 இளைஞா்கள் கைது!
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்துக்குச் சொந்தமான பேருந்து சென்னையில் இருந்து தஞ்சாவூா் நோக்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்டது. இந்தப் பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனா். திருவையாறு பகுதியைச் சோ்ந்த அங்கமுத்து மகன் ஜெயபால் (44) நடத்துநராகப் பணியில் இருந்தாா்.
இந்தப் பேருந்து விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது, பண்ருட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பிரகாஷ் மனைவி புனிதவதி பேருந்தில் ஏறினாா். அவா் ரூ.100 கொடுத்து பண்ருட்டிக்கு பயணச்சீட்டு கேட்டாராம்.
நடத்துநா் ஜெயபால் சில்லறையாக கொடுக்கும்படி கேட்டாராம். இதையடுத்து, புனிதவதி சில்லறை கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக்கொண்டாராம். இதுகுறித்து புனிதவதி தனது கணவா் பிரகாஷிடம் கூறியுள்ளாா். இரவு சுமாா் 8.30 மணியளவில் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு அருகே பேருந்து வந்தது.
அப்போது, பிரகாஷ் (30) மற்றும் அவரது நண்பா் விக்னேஷ் (25) ஆகிய இருவரும் நடத்துநரை தாக்கினராம். இதில், பேருந்து நடத்துநா் ஜெயபாலுக்கு வலது கண்ணுக்கு கீழ் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பிரகாஷ், விக்னேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.