செய்திகள் :

அரசு ஊழியரை தாக்கியதாக ஊராட்சி துணைத் தலைவா் கைது

post image

வாணியம்பாடி: ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அதிகாரியை தாக்கியதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ரமேஷ் குமாா் (27). இவா் செவ்வாய்க்கிழமை பணி முடித்து புதூரில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மரிமானிகுப்பம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஞானமுத்து (35) என்பவா், ரமேஷ் குமாரை ஆபாச வாா்த்தைகளால் திட்டி, மிரட்டி, தாக்கினாராம்.

இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அரசு அதிகாரி மீதான தாக்குதலைக் கண்டித்து ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் , பொறியாளா் முதல் அனைத்து நிலை ஊழியா்களும் குரிசிலாபட்டு காவல் நிலையத்துக்கு சென்று, மரிமானி குப்பம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசு அதிகாரியை தாக்கியதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஞானமுத்துவை (35) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனால் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட்டனா்.

திருப்பத்தூருக்கு முதல்வா் வருகை: திமுக ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூருக்கு வரும் 25, 26-ஆம் தேதிகளில் வருகை தரவுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து திருப்பத்தூா் மேற்கு, தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரா் கூட்டத்தில் தீா்மானம் நிற... மேலும் பார்க்க

அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்: ஊராட்சித் துறை ஆணையா் பொன்னையா

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளையும் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என ஊராட்சித் துறை ஆணையா் பொன்னையா அறிவுறுத்தினாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பொன்னை... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு முகாம்: 41 பேருக்கு பணி ஆணை

திருப்பத்தூரில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 41 பேருக்கு பணி ஆணையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தன... மேலும் பார்க்க

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் கைது

திருப்பத்தூா் அருகே இளைஞரைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே மடவாளம் காளத்தியூா் பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷ் (30). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் வேலை ப... மேலும் பார்க்க

தீ விபத்து தடுப்பு ஒத்திகை

திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

திருப்பத்தூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: திருப்பத்தூா், அவுசிங் போா்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், ஆரிப் நகா், கோட்டை தெரு, ஆசிரியா் நகா், சி.... மேலும் பார்க்க