செய்திகள் :

அரசு ஊழியர்களே! ஹேப்பியான ரிட்டையர்மென்ட்டுக்கு எவ்வளவு பணம் வேண்டும், எப்படி சேர்க்கலாம்?

post image

நம்முடைய எதிர்கால இலக்கு என்ன என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கினைச் சொல்வார்கள்….

குழந்தையின் கல்லூரிப் படிப்பு முக்கியம்… அதற்கான பணத்தை சேர்க்க வேண்டும் என்பார்கள் சிலர்…

மகன்/மகளின் திருமணத்துக்கான பணத்தை சேர்ப்பதுதான் முக்கியம் என்று வேறு சிலர் சொல்வார்கள்.

இன்னும் சிலர், அரசு வேலை என்பதால், ஓய்வுக் காலத்துக்குக் கொஞ்சம் சேர்த்தாகிவிட்டது. ஆனால், அது போதாது. மேற்கொண்டு பணம் சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்பார்கள்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இலக்குகள் இருந்து அதற்கான பணத்தை சேர்க்க வேண்டியது, ஓய்வுக் காலத்துக்கான பணத்தை சேர்க்க வேண்டியதுதான் மிக மிக அவசியம்.

ஓய்வுக்கால சேமிப்பு

ஓய்வுக் காலத்துக்கான பணத்தை சேர்க்க வேண்டும் என்கிறபோது, நம் மனதில் இரண்டு விஷயங்கள் வரும். ஒன்று, ஓய்வுக் காலம் என்பது பலருக்கும் 15 முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கிறது. இப்போது தொடங்கி உடனே அதற்கு பணம் சேர்க்க வேண்டுமா என்கிற எண்ணம் வரலாம்.

இந்த எண்ணம் மிகவும் தவறானது. காரணம், காலம் என்பது மிக விரைவாக கடந்து சென்றுவிடும். காலம் கடந்தபிறகு ஓய்வுக் காலத்துக்கான பணத்தை சேர்ப்பது இயலாத காரியம் ஆகும்.

25 அல்லது 30 வயதில் நீங்கள் மாதந்தோறும் 5000 ரூபாயை முதலீடு செய்யத் தொடங்கி, அதை 25 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், அதற்கு 12% லாபம் கிடைத்தால், நீங்கள் சேர்த்த தொகை ரூ.85 லட்சம் என்கிற அளவில் இருக்கும்.

85 லட்சம் ரூபாய் எனக்குப் போதாது என்று நினைக்கிறவர்கள் இன்னும் 5000 ரூபாய்க்கு பதிலாக 10,000 ரூபாயை சேர்த்தால், நீங்கள் சேர்க்கும் தொகை 1.75 கோடிக்கு மேல் கிடைக்கும்.

இரண்டாவது விஷயம், அரசு ஊழியர்கள் ஏற்கெனவே என்.பி.எஸ் திட்டம் மூலம் கொஞ்சம் பணத்தை சேர்த்திருப்பார்கள். அந்தப் பணமே போதாதா, போதாது எனில், இன்னும் எவ்வளவு தொகையை சேர்க்க வேண்டும் என்கிற கேள்வி ஒவ்வொரு அரசு ஊழியரின் மனதிலும் இருக்கும்.

நிப்பான்

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்வதற்காக ஆன்லைன் மீட்டிங் ஒன்றை நடத்துகிறது ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம். கவலை இல்லாத ஓய்வுக் காலத்துக்கு எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும், அதை எப்படி சேர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்லைன் மீட்டிங்கில் விளக்கமாக சொல்ல இருக்கிறார் நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ரீஜினல் டிரைனிங் மேனேஜர் சந்தோஷ் ஜெகந்நாதன்.

இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் எனில், https://forms.gle/tQiWh31w1NiWmjMT8 இந்த லிங்க்கினை சொடுக்கி, பதிவு செய்துகொள்வது அவசியம். பதிவு செய்துகொள்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள அனுமதி தரப்படும்.

பள்ளி, கல்லூரி ஆசிரியர், மருத்துவத் துறை, அறநிலையத் துறை, கரூவூலத் துறை எனப் பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் தமிழகத்தில் எந்த ஊரில் இருந்து வேண்டுமானாலும் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள 300 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், உடனடியாகப் பெயரைப் பதிவு செய்து, முன்கூட்டியே இந்தக் கூட்டத்திற்கு வருவது நல்லது!

மாதம் ரூ.2,00,000 வருமானம் வேண்டுமா? Retirement Life-ஐ நிம்மதியாகக் கழிக்க இதுதான் ஒரே வழி!

இன்றைய நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் ஓய்வுகாலம் குறித்தும், ஓய்வுகாலத்தில் தேவைப்படும் செளகரியங்களுக்கான செலவுகள் குறித்தும், அதை இப்போதிருந்தே எப்படிச் சேமிக்கலாம் என்பது குறித்தும் யோசிப்பதே கி... மேலும் பார்க்க

Personal Finance: NRIகள் மாதா மாதம் ₹ 70,000 பென்ஷனாகப் பெறுவது எப்படி?

சிங்கப்பூரில் சாப்ட்வேர் இன்ஜினீயராக 20 வருடங்களாக உழைத்து, ரூ.2.5 கோடி சேர்த்த ராஜேஷுக்கு இப்போது வயது 48. இன்னும் இரண்டு வருடங்களில் இந்தியா திரும்பி விட வேண்டும் என்பது அவரது திட்டம். ஆனால், 50 வயத... மேலும் பார்க்க

Diwali: குழந்தைகளுக்குக் கிடைத்த தீபாவளி காசு; என்ன செய்யலாம்?

தீபாவளி மகிழ்ச்சிகரமாக முடிந்துவிட்டது. இந்தத் தீபாவளிக்குப் பல குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்களிடம் இருந்து புது டிரஸ் அன்பளிப்பாகக் கிடைத்த அதே நேரத்தில் 100, 200 எனத் தீபாவளிப் பரிசுப் பணமும் கிட... மேலும் பார்க்க

சிறுதொழில் பிசினஸ்மேன்களே… நிதி நிர்வாகம் செய்வதில் குழப்பமா? கவலை வேண்டாம்! இதைப் படியுங்கள்!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கான மிகப் பெரிய பிரச்னையே, அவர்கள்தான் அந்த நிறுவனம் தொடர்பான வேலைகளையும் செய்ய வேண்டும்.இன்றைக்கு எவ்வளவு பொருள்கள் தயார் செய்யப்பட வேண்டும்?யாரிடம் இருந... மேலும் பார்க்க

பென்சன் தொடர்ந்து கிடைக்க வேண்டுமா? - நவம்பர் 31 தான் கடைசி தேதி; நோட் பண்ணிக்கோங்க மக்களே!

ஓய்வுப்பெற்றவர்கள் தொடர்ந்து பென்சன் பெற ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.இந்தச் சான்றிதழ் சமர்ப்பிப்பை டிஜிட்டலிலும் செய்யலாம். ஆனால், பென்சன்தாரர்கள் அனைவருக்கு டிஜிட்டலில் வா... மேலும் பார்க்க

தலை தீபாவளியைக் கொண்டாடும் இளம் தம்பதிகளே… உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

கடந்த ஓராண்டு காலத்தில் திருமணம் ஆன இளம் தம்பதிகள் இந்த ஆண்டு தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டிருப்பார்கள். ஒன்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனவர்களும் இந்தத் தீபாவளியை சிறப்பாகக்... மேலும் பார்க்க