`டியூட் படத்தில் 2 இளையராஜா பாடல்கள்; தனி வழக்கு தொடரலாம்' - சென்னை உயர் நீதிமன்...
Personal Finance: NRIகள் மாதா மாதம் ₹ 70,000 பென்ஷனாகப் பெறுவது எப்படி?
சிங்கப்பூரில் சாப்ட்வேர் இன்ஜினீயராக 20 வருடங்களாக உழைத்து, ரூ.2.5 கோடி சேர்த்த ராஜேஷுக்கு இப்போது வயது 48. இன்னும் இரண்டு வருடங்களில் இந்தியா திரும்பி விட வேண்டும் என்பது அவரது திட்டம். ஆனால், 50 வயதில் திரும்பும்போது இந்தப் பணத்தை எங்கே போட்டால், மாதம் ரூ.1.5 லட்சம் நிலையான பென்ஷனாக வரும், அதே நேரத்தில் மூலதனமும் பாதுகாப்பாக இருக்கும் என்ற குழப்பம்தான் அவருக்கு மிஞ்சிக்கிடக்கிறது.
ராஜேஷைப் போலவே உலகம் முழுவதும் 3.2 கோடி வெளிநாடு வாழ் இந்தியர்கள் இருக்கிறார்கள் என்கிறது உலக வங்கி புள்ளிவிவரம். இவர்கள் ஆண்டுதோறும் இந்தியாவுக்கு சுமார் 1.25 லட்சம் கோடி டாலர் அனுப்புகிறார்கள். ஆனால் தங்களுடைய ஓய்வுக்காலத்துக்கான நிதி திட்டமிடலில் 68% பேர் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.

வெளிநாட்டு வேலை... இந்திய ஓய்வுக்காலம்... பென்ஷன் எப்படி?
பெரும்பாலான NRI-கள் செய்யும் முதல் தவறு, வெளிநாட்டு சேமிப்பை மட்டுமே நம்பிக்கொண்டு இருப்பது. அமெரிக்காவின் 401(k) திட்டமோ, UK-யின் Pension Scheme-ஓ, சிங்கப்பூரின் CPF-ஓ எல்லாம் அந்தந்த நாடுகளில் வாழ்ந்தால் மட்டுமே பலன் தரக்கூடியவை.
நீங்கள் இந்தியா திரும்பினால், அந்த நாடுகளின் கரன்சி மதிப்பு மாறலாம், அதுவும் ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது என்பதால், உங்களுக்குக் கிடைக்கும் உண்மையான வருமானம் குறையலாம் என்பதை உணர வேண்டும்.
இரண்டாவது தவறு, Fixed Deposit மட்டுமே போடுவது. தற்போது NRE Fixed Deposit-ல் வட்டி 6.5% முதல் 7% வரை கிடைக்கிறது, ஆனால் இந்தியாவில் பணவீக்கம் சராசரியாக 6% இருக்கும்போது, உங்கள் உண்மையான லாபம் வெறும் 0.5% முதல் 1% மட்டுமே என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.
தவிர, என்.ஆர்.ஐ.கள் பலரும் ரியல் எஸ்டேட் முதலீடுதான் மிகச் சிறந்தது என நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் ஒரு ஃப்ளாட்டையோ அல்லது வீட்டையோ வாங்க வேண்டும் எனில், ரூ.1 - ரூ.3 கோடி வரை ஆகும். ஆனால், இந்தப் பணத்துக்குக் கிடைக்கும் வருமானம் 3% - 4% மட்டுமே கிடைக்கும்.
கடந்த காலத்தில் ரியல் எஸ்டேட் விலை உயர்ந்தது போல, இனிவரும் காலத்திலும் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதால், ரியல் எஸ்டேட் முதலீடு மட்டுமே நம் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தைத் தருமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
மூன்றாவது மற்றும் மிக முக்கியமான தவறு, கடைசி நேரத்தில் திட்டமிடுவது. பலரும் 50 வயதைத் தாண்டிய பிறகுதான் பென்ஷன் பற்றி யோசிக்கிறார்கள், ஆனால் அதற்குள் நேரம் கடந்துவிட்டதாலும், கூட்டு வட்டியின் பவர் ஆஃப் காம்பவுண்டிங் நன்மையை இழந்துவிட்டதாலும், குறைந்த பென்ஷனில் திருப்தி அடைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

SWP – நிலையான பென்ஷனுக்கான அறிவியல்பூர்வ தீர்வு
Systematic Withdrawal Plan என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருந்து மாதாந்திர வருமானம் பெறுவதற்கான நவீன மற்றும் வரி சேமிப்பு முறையாகும். இதில் உங்கள் மூலதனம் Equity மற்றும் Debt கலவையில் முதலீடு செய்யப்பட்டு, அதில் இருந்து ஒவ்வொரு மாதமும் நீங்கள் நிர்ணயித்த குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் மீதமுள்ள தொகை தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்.
உதாரணமாக, நீங்கள் ரூ.1 கோடியை SWP-யில் போட்டால், மாதம் ரூ.70,000 (அதாவது ஆண்டுக்கு 8.4%) எடுத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில், உங்கள் முதலீடு சராசரியாக 10% முதல் 12% வருமானம் ஈட்டும் என்பதால், நீங்கள் எடுக்கும் தொகையை விட அதிகமாக உங்கள் corpus வளர்ந்துகொண்டே இருக்கும், இதுதான் SWP-யின் மாயாஜாலம்.

வரி சேமிப்பிலும் SWP சூப்பர்!
Fixed Deposit வட்டிக்கு உங்கள் வரி வரம்புக்கு ஏற்ப 30% வரை வரி கட்ட வேண்டியிருக்கும். ஆனால், SWP-யில் எடுக்கும் தொகையில் லாபம் மட்டுமே வரிக்குட்பட்டது, அதுவும் Long Term Capital Gains-ஆக இருந்தால் ரூ.1.25 லட்சம் வரை வரி இல்லை, அதற்கு மேல் 12.5% மட்டுமே என்பதால், உண்மையான வரிச்சுமை மிகவும் குறைவு.
20 வயதில் தொடங்கினால் என்ன அதிசயம் நடக்கும்?
நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கத் தொடங்கிய உடனேயே பென்ஷன் பற்றி யோசிக்க வேண்டும் என்பதுதான் நிதி நிபுணர்கள் சொல்லும் முதல் அறிவுரை. மாதம் வெறும் ரூ.10,000 (அதாவது ஆண்டுக்கு ரூ.1.2 லட்சம்) 30 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்து, சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், 50 வயதில் சுமார் ரூ.3.5 கோடி சேர்ந்திருக்கும், இதில் இருந்து மாதம் ரூ.2.5 லட்சம் பென்ஷனாக எடுத்துக்கொள்ளலாம்.
50+ வயதில் பெரிய தொகை கையில் இருந்தால்?
வெளிநாட்டில் நீண்ட காலம் உழைத்து, கையில் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை சேர்ந்திருக்கிறதா? இதை Balanced Advantage Fund அல்லது Multi Asset Fund போன்ற திட்டங்களில் முதலீடு செய்து, மாதம் ரூ.1.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை (அதாவது ஆண்டுக்கு 7% முதல் 7.5%) எடுக்கலாம், சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் உங்கள் வருமானம் நிலையாக இருக்கும்.

NRI-களுக்கான சிறப்பு சவால்கள்... FEMA விதிகள்!
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு FEMA (Foreign Exchange Management Act) விதிகள்படி, இந்தியாவில் முதலீடு செய்வதில் பல குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இருக்கின்றன. NRE மற்றும் NRO வங்கிக் கணக்குகளில் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் schemes மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன, Repatriation rules என்ன, TDS எவ்வளவு பிடிக்கப்படும், DTAA (Double Taxation Avoidance Agreement) benefits எப்படிப் பெறுவது போன்ற விஷயங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அக்டோபர் 25 – உங்கள் பென்ஷன் எதிர்காலம் தெளிவாகும் நாள்!
Taurus Mutual Fund-ன் பிராந்திய விற்பனைத் தலைவர் Millet Bobin நேரடியாக தமிழில் நடத்தும் இந்தச் சிறப்பு வெபினாரில் கலந்துகொண்டு, உங்களுக்கு ஏற்ற பென்ஷன் தீர்வைக் கண்டுபிடியுங்கள்.
தேதி: அக்டோபர் 25, 2025 (சனிக்கிழமை)
நேரம்: மதியம் 12:30 – 2:00 (IST)
இடங்கள்: வெறும் 75 இடங்கள் மட்டுமே! முன்பதிவு கட்டாயம்.
இப்போதே பதிவு செய்யுங்கள்: https://forms.gle/1xfEvCPmdcg46qfq8
உங்கள் ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கழிக்க, இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!