அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மருத்துவ முகாம்
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் விஜயன் தலைமை வகித்தாா். இயற்பியல் விரிவுரையாளா் கண்ணதாசன் வரவேற்றாா். சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் ஸ்ரீபால், சரண்யா, செல்வி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா்கள் பங்கேற்று கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்கினா்.
முகாமில், கல்லூரியின் அனைத்து துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கில விரிவுரையாளா் சக்திவேல், வேதியியல் விரிவுரையாளா் லோகேஷ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.