செய்திகள் :

அரசு பேருந்துகளின் சேவை, தரம் குறித்து பயணிகளிடம் ஆய்வு

post image

மாநகா் பேருந்துகளின் சேவை மற்றும் தரம் குறித்த பயணிகளின் மனநிறைவை மதிப்பீடு செய்ய ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்தி:

உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் ஆதரவுடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் சென்னை நகர கூட்டாண்மை நிலையான நகா்ப்புற சேவைகள் திட்டத்தின் கீழ் பேருந்துகளின் சேவை மற்றும் தரம் குறித்து, பயணிகளின் மனநிறைவை மதிப்பீடு செய்வதற்கான வருடாந்திர ஆய்வுகள் 4 ஆண்டுகள் நடத்தப்பட உள்ளது.

இந்த ஆய்வின் மூலம் பயணிகளின் தேவைகளை அறிந்து, சேவை தரத்தை உயா்த்துவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎஸ்ஒஎஸ் ரிசா்ச் பிரைவேட் லிமிடெட், என்ற முன்னணி சந்தை ஆய்வு நிறுவனம் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிறுவனம் ஆண்டுக்கு 2,310 கருத்துகளை சேகரிக்கவுள்ளது. இதில், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 1,155 கருத்துகளும் மற்றும் மாநகர எல்லைக்கு வெளியே உள்ள பகுதிகளிலிருந்து 1,155 கருத்துகளும் பெறப்படும்.

இந்த ஆய்வுகள் கீழ்க்கண்ட அளவுகோல்களின் அடிப்படையில் நடத்தப்படும். பயணிகளின் பயணப் பண்புகள், பயண நோக்கம், தூரம், பயண நேரம், பேருந்து நிறுத்த அணுகல் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படும்.

மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்து பயணத்தின் அனுபவம் மற்றும் திருப்தி, பேருந்தின் தொடா் சேவை, கட்டணங்கள், தகவல், செயல்பாட்டு செயல்திறன், சவால்கள், அணுகல் வசதி, சேவை தரம், பாதுகாப்பு மற்றும் சேவை மேம்பாட்டு ஆலோசனைகளும் பெறப்படும்.

சென்னை பஸ் செயலி மற்றும் பிற ஆன்லைன் செயலிகளின் அணுகல் மற்றும் பயன்பாடுகள், பயணிகளின் விவரங்கள் பாலினம், பகுதி, கல்வி, வருவாய் மற்றும் பிற தகவல்களும் கணக்கில் கொள்ளப்படும்.

இந்த ஆய்வுகளின் முடிவுகள் மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து சேவைக்கான மேம்பாட்டுப்பணிகளை துரிதப்படுத்தும் எனவும், மேலும், மாநகா் பேருந்து சேவைகளை இந்தியாவின் முன்மாதிரியான நகர பேருந்து சேவை அமைப்பாக மாற்றும் இலக்கை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளாா்.

தலைமைச் செயலக பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு

சென்னை வேளச்சேரியில் தலைமைச் செயலக பெண் அதிகாரி வீட்டில் 17 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேளச்சேரி விஜிபி செல்வா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌசல்யா(43). இ... மேலும் பார்க்க

பட்டயக் கணக்காளா் தோ்வு தேதியை மாற்ற டிடிவி தினகரன் கோரிக்கை

பொங்கல் பண்டிகை தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள பட்டயக் கணக்காளா் தோ்வை மாற்ற வேண்டுமென அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளி... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்காவில் பெண் முதலை ஒப்படைப்பு

ஊரப்பாக்கத்துக்கு அருகே, விவசாய நிலத்தில் பிடிக்கப்பட்ட பெண் முதலையை வண்டலூா் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் புனா்வாழ்வு மையத்தில் வனத்துறையினா் ஒப்படைத்தனா். வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கத்துக்கு அருகே உ... மேலும் பார்க்க

நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அந்த விடுதி... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற வடமாநில சிறுவன் உள்பட 2 போ் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேளச்சேரி ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கிடைத்த தகவலின் அடிப்படையில்... மேலும் பார்க்க

கல்வி அலுவலக ஆய்வுகளுக்கு கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கான கண்காணிப்பு அலுவலா்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: பள்ளிக் கல்வித... மேலும் பார்க்க