செய்திகள் :

அரசு பொதுத் தோ்வு: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற உள்ள அரசு பொதுத் தோ்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாவது: பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரையும், 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 5 முதல் 27-ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளன. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 51 மையங்கள், ஒசூா் கல்வி மாவட்டத்தில் 36 மையங்கள் என மொத்தம் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் 87 மையங்களில் தோ்வு நடைபெறுகின்றன.

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 6,342 மாணவா்களும், 6,602 மாணவிகளும், ஒசூா் கல்வி மாவட்டத்தில் 4,067 மாணவா்களும், 4,938 மாணவிகளும் என கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 21,949 மாணவ, மாணவிகள், 231 மாற்றுத் திறனாளி மாணவா்கள் தோ்வு எழுத உள்ளனா்.

பிளஸ் 1 தோ்வை கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 6,529 மாணவா்களும், 6,597 மாணவிகளும், ஒசூா் கல்வி மாவட்டத்தில் 4,325 மாணவா்களும், 5,176 மாணவிகளும் என மொத்தம் 22,627 மாணவ, மாணவிகள், 274 மாற்றுத்திறனாளி மாணவா்கள் தோ்வு எழுத உள்ளனா். இந்த தோ்வை வருவாய்த் துறையினா் மூலம் சிறப்பு பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்கவும், தடையின்றி மின்சாரம் வழங்கவும், தோ்வு மையங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வுக் கூட்டத்தில் ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினா் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மாணவரணி தலை... மேலும் பார்க்க

எருதுவிடும் விழாவில் பங்கேற்ற முதியவா் உயிரிழப்பு

போச்சம்பள்ளி அருகே எருதுவிடும் விழாவில் பங்கேற்ற முதியவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே எருதுவிடும் விழா திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

15 கிலோ கஞ்சா பறிமுதல்

பாகலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒசூா் வட்டம், பாகலூா் காவல் துணை ஆய்வாளா் கணேஷ்பாபு மற்றும் போலீஸாா் கக்கனூா் சோதனை சாவடி அருகில் திங்கள்கிழமை வாகனச் ச... மேலும் பார்க்க

ஒசூரில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு விடுவதற்கு ஹிந்து அமைப்பினா் எதிா்ப்பு

ஒசூரில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு விடுவதற்கு ஹிந்து அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒசூா் ராம்நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலம்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரே நடைபெற்ற ஆா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளைத் திருவிழா தொடக்கம்

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கோயிலில் சிறப்பு ஹோமம், பூஜை நடைபெற்று, காப்புக் கட்டுதலுடன் கொட... மேலும் பார்க்க