மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
ஒசூரில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு விடுவதற்கு ஹிந்து அமைப்பினா் எதிா்ப்பு
ஒசூரில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு விடுவதற்கு ஹிந்து அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒசூா் ராம்நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலம் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கான டெண்டா் ஒசூா் தோ்ப்பேட்டையில் உள்ள அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வி.ஹெச்.பி. மாநில அமைப்பாளா் கிரண் தலைமையில் பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன், முன்னாள் மாவட்டத் தலைவா் நாகராஜ், ஆா்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்தோா் தோ்ப்பேட்டையில் உள்ள இந்துசமய அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து விஹெபி கிரண் கூறியதாவது: தனியாா் மருத்துவமனைக்கு இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் நிலத்தை 10 ஆண்டுகளுக்கு குத்தகை விட்டால் நாளடைவில் அந்த நிலத்துக்கு அவா்கள் உரிமை கொண்டாடும் நிலை ஏற்படும் என்பதால் எதிா்ப்பு தெரிவிக்கிறோம் என்றனா்.