ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
15 கிலோ கஞ்சா பறிமுதல்
பாகலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஒசூா் வட்டம், பாகலூா் காவல் துணை ஆய்வாளா் கணேஷ்பாபு மற்றும் போலீஸாா் கக்கனூா் சோதனை சாவடி அருகில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் அந்த காரில் 15 கிலோ தடை செய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் கஞ்சாவைக் கடத்தி வந்தவா் ஒடிஸா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தைச் சோ்ந்த ஜோசோபந்தா மொஹந்தி (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 15 கிலோ கஞ்சா, காா், கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.